Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil
கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே
கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே
யாருமில்லா வாழ்க்கையில்
நீ இருக்க ஏங்கினேன்
காலம் வரை காதலாய்
உன் மடியில் தூங்கினேன்
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு
கனா கனா அதில் நீ வந்ததேன்
நிலா விழும் வரை தேன் தந்ததேன்
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்
எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வழி ஒன்றும்
உலகில் இல்லையே
தூரம் அன்றாடம் சொல்லுதே
ஈரம் கண்ணோரம் மின்னுதே
நீயும் வாழும் பூமி மீதிலே
அமுதங்களால் நிறைந்தேன்
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்
குமுதங்களால் மலர்ந்தேன்
நம் உயிர் வானிலே
நிலவாய் முகம் தேயுமே
உன் முகம் தேடியே
புதிதாய் உயிர் பூக்குமே