Naalum Naalum Song Lyrics in Tamil
நாளும் நாளும்
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
வாரம் மாதம்
வருடம் ஆகும்
வருடம் ஆகும்
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
வருடம் ஆகும்
இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
புல் மனதின் உள்ளே
துள்ளி ஏறும் காலை போல
பல எண்ணம்
மூடி வைத்த உண்மை
என்ன வென்று அந்த
முத்து கண்கள் சொல்லும்
சொல்லிவிட
வேண்டும் என்று
எண்ணி வரும் போது
சொற்கள் என்னை கட்டிபோடுதே
சொல்ல சொல்ல ஒத்திகையில்
பக்கம் நின்ற வார்த்தை
அந்தரத்தில் விட்டு போகுதே
பேசாத நம் உணர்வெல்லாம்
மொழி இங்கு சொல்லாது
திருமணங்கள் இணைந்தாலே
பாலங்கள் வராது
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
நெஞ்சங்கள் இரண்டு
தேடி தேடி
தன்னை தொலைத்ததும் என்ன
கண் இமைகள் மூட
அந்த உலகினில் கண்ட
கனவு என்ன
தன்னிடத்தில் துளிகளை
தேங்கி வைத்த மேகம்
எந்த நொடி மழை தருமோ
தொட்டு தொட்டு கிளைகளில்
பட்டு வரும் காற்று
எந்த நொடி பூவை தொடுமோ
நதி போகும் திசையோடு
சிறு ஓடம் செல்லாதோ
பயணங்கள் இது என்ன
கடலோடும் தொடராதோ
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
வாரம் மாதம்
வருடம் ஆகும்
இந்த காலம் என்னும்
சோலை தன்னில்
மண் மலர்ந்த
பூவும் சொல்லும்
எத்தனையோ காலங்களை
காத்திருந்து தானே
நான் இன்று மலர்ந்தேன்
என்ன அதிசயம்
இயற்கையின் அழகிலே
நாளும் நாளும்
சேர்ந்தால் தானே
Naalum Naalum Song Lyrics in English
MOVIE | 60 Vayathu Maaniram |
MUSIC DIRECTOR(S) | Ilaiyaraaja |
LYRICIST | Vivek |
ACTORS | Prakash Raj , Vikram Prabhu , Samuthirakani , Indhuja Ravichandran |
DIRECTOR | Radha Mohan |